திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்!... சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்

Report
370Shares

திருமண மண்டபத்தில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை சிறுவன் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.

இவர் கடந்த 18 ஆம் திகதி, மதுரை காளவாசல் பகுதியில் உள்ள லட்சுமி திருமணமண்டபத்தில் தனது மகளுக்கு சுபநிகழ்ச்சி வைத்துள்ளார்.

இந்நிலையில், திருமண மண்டபத்தில் ரொக்கப்பணமாக ரூபாய் ஒரு லட்சம் காணாமல் போனதாக கூறப்படுகிறது.

இதனால், அதிர்ச்சியடைந்த ராஜ்குமார், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், புகாரைப் பெற்ற பொலிசார், விசாரணை மேற்கொண்டு, திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது, 13 வயது சிறுவன் பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் காமெராவில் பதிவாகி இருந்தது.

இதைத்தொடர்ந்து, பொலிசார் குறித்த சிறுவனை பிடித்து பணத்தை பறிமுதல் செய்து ராஜ்குமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேலும், குறித்த சிறுவனிடம் விசாரணை மேற்கொண்டத்தில், சிறுவன் பெத்தானியாபுரம் பகுதியைச் சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது.

11871 total views