பாலத்தில் தொங்கவிடப்படும் சடலங்கள்.. இறந்த பின்பும் தொடரும் அவலம்..! காரணம் இது தான்

Report
457Shares

வேலூர் மாவட்டத்தில் சுடுகாட்டிற்கு செல்ல பாதைகள் இல்லாத காரணத்தால் பாலத்தின் வழியாக கயிறை கட்டி இறக்கி சுடுகாட்டிற்கு கொண்டு செல்லும் அவலத்தை சந்தித்து வரும் மக்கள் மிகவும் வேதனையடைந்துள்ளனர்.

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகேயுள்ள நாராயணபுரம் காலனி பட்டியலின மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்களுக்கென அப்பகுதியில் தனி சுடுகாடு இருக்கிறது.

குறித்த சுடுகாடுக்கு செல்ல வேண்டுமென்றால், பாலாற்றை கடந்து தா செல்ல வேண்டும். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றை கடக்க பாலம் கட்டப்பட்டுள்ளது.

மேலும், பாலாற்றின் பாலத்தின் இரு பகுதிகளிலும் விவசாயிகள் வேலி அமைத்து நாராயணபுர காலனி மக்களை அப்பகுதியில் செல்ல எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், சில தினங்களுக்கு முன்பு, விபத்தில் இறந்த நாராயணபுரத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் உடல், விவாசய நிலங்களின் வழியாக செல்ல எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, வேறு வழியில்லாமல், பாலத்தில் இருந்து கயிற்றால் இறக்கி அதன் பின்னர் அங்கிருந்து இவர்கள் சுடுகாட்டிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில், இறந்த பிறகும் தொடரும் இந்த அவலம் பற்றி, கிராமமக்கள், மாவட்ட ஆட்சியருக்கும், முதல்வரின் தனி பிரிவிற்கும் தெரிவித்துள்ளதாக கூற்அப்படுகிறது. ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அரசு மெத்தனம் காட்டுவதாக அப்பகுதி மக்கள் வேதனையடைந்துள்ளனர்.

13922 total views