கணவருக்கு தினமும் இரண்டு வேளை லட்டு மட்டுமே கொடுத்த மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த செயல்..!

Report
395Shares

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சாப்பிட கணவனுக்கு மனைவி லட்டுகளை மட்டுமே கொடுத்ததால் கணவர் விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேச மாநிலம் மீரூட் மாவட்டத்தில் ஒரு தம்பதிகளுக்கு திருமணமாகி 10 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர். அண்மையில் கணவருக்கு சிறிய நோய் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கணவர் சற்று அவதிபட்டு வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மனைவி ஒரு தாந்திரிகரிடம் சென்று தனது கணவரின் நிலை குறித்து கூறியுள்ளார்.

அதற்கு அந்தத் தாந்திரிகர் மனைவியிடம் கணவருக்கு சாப்பிட காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளைகளிலும் லட்டுகளை மட்டுமே கொடுக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு மனைவி சாப்பிட காலையில் நான்கு லட்டுகளும் இரவில் நான்கு லட்டுகளும் வழங்கியுள்ளார். இதற்கு இடையில் சாப்பிட எதுவுமே கொடுக்கவில்லை.

இதனால் மனமுடைந்த கணவர் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து தரக் கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதற்கு காரணம் அவர் சாப்பிட வெறும் லட்டு மட்டுமே தருகிறார் எனக் கூறியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனுவை பார்த்த ஆலோசனை வழங்கும் அதிகாரிகளும் மிகவும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

10743 total views