ரத்தவெள்ளத்தில் தாய்.... தூக்கில் தொங்கிய நிலையில் தந்தை! 7 வயது சிறுவனின் கதறல்... நடந்தது என்ன?

Report
363Shares

சென்னையில் தாய் படுக்கையில் இரத்த வெள்ளத்திலும், தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை பார்த்து நடுங்கி 7 வயது சிறுவன் ஒருவன் கதறி அழுதுள்ளது பெரும் கஷ்டத்தினை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் பொலிசராக வேலை பார்த்து வருகிறார் நரேஷ். இவருக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவியும் 7 வயதில் மகனும் உள்ளனர்.

திருமணம் ஆன நாள் முதலே சண்டையுடன் சென்று கொண்டிருந்தது. பின்பு சண்டை போட்டு கோபித்துக்கொண்டு தனது அண்ணன் வீட்டிற்கு சென்றுள்ளார் ஜெயஸ்ரீ. அவரை சமாதாப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் நரேஷ்.

குடிப்பழக்கம், சந்தேகம் நரேஷை ஆட்டிப்படைத்துள்ளது. சம்பத்தன்று மனைவியை தனது வீட்டிற்கு அழைத்துவந்துவிட்டு மீண்டும் குடித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டை முற்றிப்போய், ஒரு கட்டத்தில் ஜெயஸ்ரீயை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நரேஷ் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் காலையில் எழுந்து பார்த்ததும் அம்மா ரத்த வெள்ளத்திலும், அப்பா தூக்கில் தொங்கியதைக் கண்டு நடுநடுங்கி கதறியுள்ளான்.

பின்பு அக்கம் பக்கத்தினர் அவதானித்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் விசாரணையிலேயே நரேஷின் சந்தேகம், குடிபழக்கம் தான் இதற்கு காரணம் என்பது தெரியவந்துள்ளது.

10889 total views