உயிரோடிருக்கும் அபிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய தாய்.... இந்த கொலைவெறிக்கு காரணம் என்ன?

Report
954Shares

நெல்லை மாவட்டத்தில் தனது மகள் திருமணமான ஆணை காதலித்து அவரை திருமணம் செய்ய வீட்டை விட்டு வெளியாக மகளுக்கு தாய் ஒருவர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவை சேர்ந்தவர் பன்னீர் செல்வத்தின் மகள் அபி(19). இந்த பெண் சந்தோஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஆவார்.

திடீரென ஒரு நாள் அபிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கணவர் சந்தோஷ் குறித்த பிரிண்டிங் பிரஷிற்கு போன் செய்து விபரத்தைக் கேட்டுள்ளார்.

அதற்கு அவர்கள் கடந்த 14ம் திகதி தனது மகள் மஞ்சள்காமாலையால் உயிரிழந்துவிட்டார் என்று தாய் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் தயார் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சந்தோஷ் பொலிசாரிடம் புகார் அளித்ததன் பெயரில் அபியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அதில் அமராவதி கூறுகையில், தனது கணவர் பன்னீர் செல்வம் 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில் 3 பெண் பிள்ளைகளை கஷ்டப்பட்டு வளர்த்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுத்துள்ளேன்.

இந்நிலையில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் என் மகள் அபி சந்தோஷ் என்பவரை காதலித்து வந்தார். இவர் ஏற்கெனவே திருமணம் ஆனவர். பலமுறை எனது மகளைக் கண்டித்தும் கேட்கவில்லை.

சந்தோஷின் குணம் சரியில்லாததால் வேண்டாம் என்று கூறியும் கேட்காமல் அவனைத் திருமணம் செய்து கொண்டார் அதனால் ஆதங்கத்தில் இவ்வாறு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்ததாக தாய் கூறியுள்ளார்.

38022 total views
loading...