இளைஞருடன் தகாத பழக்கம்!... நள்ளிரவில் மனைவி கொலை! கணவனின் அதிரவைக்கும் வாக்குமூலம்

Report
724Shares

தமிழகத்தில் மனைவியை கொன்று விட்டு நாடகமாடிய கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கரூரை சேர்ந்தவர்கள் சிவசங்கர்- சூரியகுமாரி தம்பதி, கடந்த யூலை மாதம் 15ம் திகதி சூரியகுமாரியை காணவில்லை என சிவசங்கர் பொலிசில் புகார் அளித்தார்.

இதன்பேரில் பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிவசங்கரின் நடவடிக்கை மீது சந்தேகம் எழுந்தது.

அவரது செல்போனை ஆய்வு செய்யலாம் என நினைத்த போது, செல்போன் காணாமல் போனதாக கூறியுள்ளார்.

தொடர்ந்து அவரது செல்போனின் கடைசி சிக்னல் பற்றி விசாரணை நடத்தியதில் கொடை ரோடு அருகே காட்டியுள்ளது.

அங்குள்ள பொலிசாரை தொடர்பு கொண்ட போது சாக்குமூட்டை பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் சிவசங்கரிடம் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில், மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார்.

திருமணமாகி 19 ஆண்டுகளுக்கு பின்னர் இளைஞர் ஒருவருடன் தன் மனைவிக்கு தொடர்பு இருந்ததாகவும், வேறொரு இளைஞருடன் சேர்ந்து டிக்டாக் செய்ததாலும் ஆத்திரித்தில் இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

அன்றைய தினம் இரவு சூரியகுமாரி தூங்கிக் கொண்டிருந்த போது தலையில் அடித்துக் கொன்று விட்டு சாக்குபையில் கட்டி கொடை ரோட்டில் வீசியதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிவசங்கரை கைது செய்த பொலிசார் சிறையில் அடைத்தனர்.

26118 total views