சிறுவனின் உயிரை பறித்த ஜெல்லி மிட்டாய்!... தாயின் கண்முன்னே துடிதுடித்து இறந்த பரிதாபம்

Report
332Shares

தமிழகத்தில் ஜெல்லி மிட்டாய் வாங்கி சாப்பிட்ட சிறுவன் யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரை சேர்ந்தவர் தர்மராஜ், இவரது மனைவி சசி தேவி, இவர்களுக்கு ரெங்கநாதன்(வயது 4) என்ற மகன் இருக்கிறான்.

வெளியில் விளையாடிக் கொண்டிருந்த ரெங்கநாதன், தின்பண்டம் கேட்டு அடம்பிடித்ததால் ரூ.10க்கு சசிதேவி ஜெல்லி மிட்டாய் வாங்கி கொடுத்துள்ளார்.

டப்பாவில் இருந்த அனைத்தையும் வாயில் ரெங்கநாதன் போட்டுவிட, ஜெல்லியின் வழவழப்புத் தன்மையால் மூச்சுவிட முடியாமல் சிரமப்பட்டுள்ளான்.

மிட்டாயும் தொண்டையில் சிக்கிவிட, தாயின் கண்முன்னே பரிதாபாமாய் துடிதுடித்து பலியானான்.

அவசரமாய் ரெங்கநாதனை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்ற போதும் பலனில்லாமல் போனது, இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

10946 total views