தற்கொலை செய்துகொண்ட உரிமையாளரின் உடலை.. யாரையும் நெருங்க விடாமல் காத்த நாய்..! நெகிழ வைத்த சம்பவம்

Report
485Shares

வேலூரில் தற்கொலை செய்துகொண்ட தனது எஜமானியின் சடலத்தை யாரையும் நெருங்க விடாமல் வளர்ப்பு நாயனது பார்த்துகொண்ட சம்பவம் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். இவருடைய மனைவி ராதா. இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளது.

தனசேகர் வட்டார்கேன் போடும் தொழில் செய்துவந்தார்.

இந்நிலையில், தன் தொழிலை மேம்படுத்துவதற்காக பல இடங்களில் கடன் வாங்கி வைத்திருந்தார் தனசேகரன்.

கடன் வாங்கியும் அவரால், தொழிலை மேம்படுத்த முடியாததால் கடன் கொடுத்தவர்கள் கடனை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர்.

இதனால், தனசேகரன் மனைவி, பிள்ளைகளை விட்டுவிட்டு தலைமறைவானார்.

இதைத்தொடர்ந்து, கடன் கொடுத்தவர்கள் ராதாவை தொல்லை செய்ய தொடங்கினர்.ஒரு கட்டத்திற்கு மேல் ராதாவால் பிரச்சனைகளை சமாளிக்க இயலவில்லை. இதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடல் அவர் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

காவல்துறையினர் அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதற்காக வீட்டிற்கு விரைந்தனர். ஆனால் ராதா வளர்த்த செல்ல நாயானது அவரின் உடலை யாரையும் தொட விடாமல் பாதுகாத்து கொண்டிருந்தது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண் கலங்கினர்.

காவல்துறையினர் ஒருவழியாக நாயை அனுப்பி வைத்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவமானது வேலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14547 total views