பிணமாக கிடந்த அம்மாவை குளிக்க வைத்து குப்பைத்தொட்டியில் வீசிய மகன்... பின்னணியின் நிகழ்ந்த சோகச்சம்பவம்!

Report
932Shares

இந்தியாவில் மகனே தாயின் பிணத்தினை குப்பைத்தொட்டியில் போட்டுச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.

தூத்துக்குடி தனசேகரன்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்ட இரும்பு குப்பைத்தொட்டியில் இருந்த கழிவுகளை அகற்றுவதற்கு துப்புரவு தொழிலாளர்கள் வந்த போது அங்கு குப்பைகளுக்கு இடையே பெண்ணின் பிணம் ஒன்று கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதின் பெயரில், விரைந்து வந்த பொலிசார் பிணத்தினை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தியதில், வறுமையின் காரணமாக பெற்ற தாயின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்ய பணம் இல்லாததால் அவரது மகனே குப்பை தொட்டியில் வீசி சென்ற பரிதாப சம்பவம் தெரியவந்துள்ளது.

பிணமாக கிடந்த அந்த பெண்ணின் பெயர் வசந்தி (வயது 50). அவருடைய கணவர் நாராயணசாமி. இவர்களுக்கு முத்துலட்சுமணன் (29) என்ற மகன் உள்ளார். நாராயணசாமி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னைக்கு சென்று, அங்குள்ள ஒரு ஆசிரமத்தில் தங்கி வசித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் வசந்தி தனது மகன் முத்துலட்சுமணனுடன் வசித்து வந்தார். முத்துலட்சுமணன் கோவில் பூசாரியாராக உள்ளார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தான் அவரது செலவினை பார்த்துள்ளார்.

இதனால் நோய்வாய்ப்பட்டிருந்த தனது தாயினை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாத அவர் வீட்டிலேயே வைத்துவிட்டு தனது வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு திடீரென உயிரிழந்தார். தனது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய தன்னிடம் பணம் இல்லாததால் முத்துலட்சுமணன் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்ற அவர், மனதைக் கல்லாக்கிவிட்டு, தனது வீட்டுக்கு அருகே உள்ள குப்பைத்தொட்டிக்கு அருகில் தாயின் உடலை வீசினால் அதை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்து சென்று அடக்கம் செய்து விடுவார்கள் என்று நினைத்து அங்கு தாயின் உடலை வீசி உள்ளார் என்று நினைத்து குப்பைத்தொட்டையில் போட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது இரப்பை காலியாக இருந்துள்ளது தெரியவந்துள்ளது. வறுமையால் பட்டினியாக இறந்துள்ளார். பின்பு மகனிடம் ஒப்படைக்கப்பட்ட அத்தாயின் சடலத்தினை, அவரது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உதவியுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றுள்ளது.

28940 total views