வெள்ளத்தில் அமர்ந்து சென்ற மனிதன்.. அலாவுதீனின் வம்சமா இருக்குமோ என்ற சந்தேகம்.. இணையத்தில் வைரல்..!

Report
568Shares

வெள்ளத்தில் ஒரு மனிதன் நீரில் அமர்ந்து செல்லும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாகிஸ்தான் நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வெள்ள்த்தால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வெள்ள நீரில் ஒரு மனிதன், தெர்மாகோலில் உட்கார்ந்தபடியே மிதந்து சென்ற காட்சி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கராச்சி பகுதியில், வீட்டினுள்ளிருந்து ஒருவர் இதனை படம் பிடித்து இணையத்தில் பகிர்ந்துள்ளார். இஸ்தான்புல் நாட்டின் பிரபலமான கதையான அலாவுதீனில் இவ்வாறு தான் கதாநாயகன் ஒரு போர்வை அமர்ந்து பறந்து செல்வார் என இந்த பதிவின் கீழ் பல கமெண்டுகள் எழுந்து வருகின்றன..

25672 total views