கணவனால் வகுப்பறையில் 30 இடத்தில் குத்தி கொலை செய்யப்பட்ட ஆசிரியை... அம்மா இறந்தது தெரியாமல் கதறும் இரட்டைக் குழந்தைகள்!

Report
504Shares

வகுப்பில் பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியையை அவரது கணவர் 30 இடங்களில் கத்தி மற்றும் ஸ்குரு ட்ரைவரால் குத்தி கொலை செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், ஓம்சக்தி நகரைச் சேர்ந்தவர் குருமுனிஸ்வரன் (36), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ரதி தேவி. திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிய நிலையில் இவர்களுக்கு ஹர்‌ஷவர்தன் (5), ஹர்சவர்த்தினி (5) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

கணவன் மனைவி கருத்து வேறுபாடு காரணமாக ரதிதேவி காரியாபட்டி அருகே உள்ள தனது பெற்றோர் வீட்டில் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தவர், சில மாதங்களுக்கு முன்பு திருமங்கலத்தில் தனியார் பள்ளியில் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியில் இருந்த கணவர் குருமுனீஸ்வரன் மனைவியின் பள்ளிக்கு வந்து அவரிடம் பேசிக்கொண்டிருந்துள்ளார். பின்பு திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் ஸ்குரு டிரைவரை எடுத்து 30 இடத்தில் குத்தியுள்ளார். ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்த ஆசிரியை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

தனது தாய் தந்தையால் கொலை செய்யப்பட்டு பிரேத பரிசோதனைக்கு கொண்டுசெல்லப்பட்டதை அறியாத இரட்டைக் குழந்தைகள் அம்மா, அம்மா என்று கதறி அழுதுள்ளனர். இரட்டைக்குழந்தைகளின் கண்ணீர் அங்கிருந்தவர்களை கலங்க செய்துள்ளது.

20110 total views