60 வருடங்களாக விடுமுறை எடுக்காமல் வேலை செய்யும் 91 வயது பாட்டி! அதுவும் என்ன வேலை தெரியுமா?

Report
1081Shares

கேரளாவைச் சேர்ந்த காத்ரினா என்னும் 91 வயது பாட்டி 60 வருடங்களில் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் கட்டிட வேலைக்குச் சென்று வருகின்றார்.

தினமும் 5 மணிக்கு எழுந்து வேலையினை முடித்துவிட்டு தனது வழக்கமான ஆட்டோ சாரதியுடன் கட்டிட வேலைக்குச் சரியான நேரத்திற்கு சென்று விடுவாராம். இப்போது வரை எந்தவொரு பிரச்சினையின்று சென்று கொண்டிருக்கும் இந்த வேலையினை சாகும்வரை மனம் தளராமல் பார்ப்பதாக கூறியுள்ளார்.

கட்டிட பணி எங்கு நடந்தாலும் 60 ஆண்டுகளில் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காத இந்த பாட்டியைத் தான் முதலில் அழைப்பார்களாம். இவரது காலை உணவு வெறும் 3 காபி தான். தன்னை அழைப்பது மட்டுமின்றி தன்னுடன் வேலைபார்க்கும் மகள் பிலோமினா உட்பட அனைவரையும் மிரட்டி வேலைவாங்கும் அதிகாரமும் இவருக்கு கொடுத்து விடுவார்களாம்.

60 ஆண்டுகால உழைப்பினால் தனது 4 பிள்ளைகளுக்கு சொந்தமாக வீடு கட்டிக்கொடுத்திருக்கும் இந்த பாட்டிக்கு 9 பேரக்குழந்தைகளும் 14 கொள்ளு பேரன், பேத்திகளும் இருக்கின்றனர். தனக்கு என்று எதுவும் வைத்துக்கொள்ளாமல் மனநிறைவோடு அவர்களுக்கு செலவு செய்து வருகின்ற இவரை பாராட்டுவதற்கு வார்த்தை ஏது?

35551 total views