ஒன்றரை கோடிக்கு சொந்தமான கணவர் பிணமாக கண்டெடுக்கப்பட்ட அதிர்ச்சி! அழகான காதல் திருமணத்திற்கு பின்னணியில் என்ன நடந்தது ?

Report
259Shares

காதல் திருமணம் செய்த சாப்ட்வேர் இன்ஜினீயர் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சையத் தன்வீர் அகமத் என்ற இளைஞர் காலேஜில் தன்னுடன் படித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குடும்பத்தினருக்கு காதல் திருமணத்தில் உடன் பாடு இல்லை என்பதால், தனது குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி காதலியை கரம் பிடித்துள்ளார். பிறகு அகமத்க்கு அயர்லாந்து நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை கிடைத்துள்ளது.

இதனால், காதல் மனைவியுடன் அவர் அயர்லாந்து சென்றுள்ளார். இந்நிலையில் மனைவி கர்ப்பமாகியுள்ளார்.

அதனால் காதல் மனைவியின் அம்மா வீட்டுக்கு ராயக்கோட்டை வந்திருந்தார். கடந்த ஒரு மாசமாக அங்குதான் இருந்துள்ளார்கள்.

இதனிடையே, கடந்த 12ம் திகதி காலை, பெங்களூருவுக்கு சென்ற அகமத், அன்று மாலை 4 மணிக்கு "ஓசூர் வந்துட்டேன்" என்று மனைவிக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

ஆனால், வீட்டுக்கு வந்து சேரவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப்பில் இருந்தது. இதனால் பதட்டமடைந்த மனைவி மறுநாள், ராயக்கோட்டை போலீசில் புகார் செய்யவும், போலீசாரும் மாயமான அகமதுவை தேட ஆரம்பித்தனர்.

இந்நிலையில், நேற்று ராயக்கோட்டை ரயில்வே தண்டவாளத்தில் சேலம் ரயில்வே போலீசார் அகமத்தின் சடலத்தினை மீட்டுள்ளனர்.

இதேவேளை, அகமது பெங்களூருவில் ஒன்றரை கோடிக்கு வீடு ஒன்றை வாங்கியுள்ளாராம். அதனால் சொத்துக்கு ஆசைப்பட்டு அவரை காதல் திருமணத்தில் விருப்பம் இல்லாத உறவினர்கள் கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

8787 total views