பியூட்டி பார்லரில் இளம்பெண் செய்த விபரீத செயல்..! என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை.. சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்..!

Report
758Shares

கோவையில் பெண்கள் அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த இளம்பெண் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை இடயார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஷோபனா. இவர் அந்த பகுதிக்கு அருகிலுள்ள பாப்பம்பட்டியிலுள்ள பெண்கள் அழகு நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 3 தினங்களுக்கு முன்னர் ஷோபானாவிற்கு உடல்நிலை சரியில்லை, உடனே வந்து அழைத்து செல்லுங்கள் என குறித்த அழகு நிலைய உரிமையாளர் ஷோபனாவின் பெற்றோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால், பதற்றமடைந்த ஷோபனாவின் பெற்றோர் உடனடியா அழகு நிலையம் சென்று பார்த்தபோது, அங்கு அவர் தூக்கில் தொங்கியபடி சடலமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் கதறி துடித்தனர்.

இதைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து பொலிசாருக்கு தகவல் அனுப்பப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் ஷோபனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், தன் மகள் தற்கொலை குறித்து சந்தேகம் இருப்பதாகவும், அவள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு கோழை இல்லை, எனவே குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, சாலை மறியல் செய்ய ஆரம்பித்தனர்.

இதனால், அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பிரேத பரிசோதனை முடிந்த பிறகே சம்பவம் குறித்த நடவடிக்கைகளை எங்களால் மேற்கொள்ள இயலும் எனக் கூறி பொலிசார் ஷோபனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்களை சமரசம் செய்தனர். ஆனால் அதற்கு மசியாத ஷோபனாவின் உறவினர்களும், பெற்றோர்களும் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி அவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தி கைது செய்துள்ளனர் பொலிசார்.

23868 total views