பிரபல சீரியல் நடிகை சாலை விபத்தில் மரணம்..! சோகத்தில் திரைத்துரையினர்

Report
3183Shares

பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு சாலை விபத்தில் உடல் நசுங்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் மகலு ஜானகி. இந்த சீரியலில் மங்களா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா(45).

இவர் நேற்று இரவு தனது குடும்பத்துடன் பாகல்கோட் பகுதியில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களின் கார் சித்ராதுர்கா என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் டையர் வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய கார் ஒரு லாரியின் மீது மோதியது. இதில், ஷோபாவோடு சேர்த்து அவரின் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இரு குழந்தைகள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

நடிகை ஷோபாவின் மறைவு கன்னட தொலைக்காட்சி நடிகை, நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

102235 total views