பெண்ணால் சரிந்த அண்ணாச்சி ஊழியர்களுக்கு செய்த சலுகைகள் இவ்வளவா?...

Report
338Shares

ஜோதிடரின் வாக்கை வேதவாக்காக எடுத்துக் கொண்டு பெண் மீது ஆசை ஏற்பட்டு கொலையாளியாகி கடைசியில் ஆயுள்தண்டனை கைதியாக மரணித்த அண்ணாச்சி ராஜகோபால் தனது சரவண பவன் ஹொட்டலில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கிய சலுகைகள் என்னென்ன என்பதை தற்போது பார்க்கலாம்.

  • குடும்பத்தில் ஒருவராக நடத்தும் ஐயா எங்களது குடும்பத்தில் எந்த பிரச்சினையாக இருந்தாலும் தைரியமாக அவரிடம் கூறலாம். பின்பு அவரே அதனைப் பார்த்து சரிசெய்து விடுவார்.
  • அவரது சொந்த ஊர் தூத்துக்குடி பக்கம் புன்னையாடி கிராமம். இங்கு சொன்று வருவதற்கு வருடா வருடம் தனி விடுமுறை மட்டுமல்லாமல் சென்று வருவதற்கு பணமும் கொடுப்பாராம்.
  • ஒவ்வொரு ஊழியருக்கும் செல்போன், பைக், அதற்கான பெட்ரோல் செலவு, தினசரி செய்தித்தாள் வாங்கி படிப்பதற்கு காசு என்று தாராளமாக செய்துள்ளார். அதுமட்டுமல்லாமல் முடிவெட்டுவதற்குக் கூட காசு கொடுத்து வந்தாராம். சில மாதங்களுக்கு முன்பு தான் அதை நிறுத்தியுள்ளார்களாம்.
  • அண்ணாச்சி உணவகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு வருடா வருடா சலுகை அதிகரிக்குமே தவிர குறையவே குறையாதாம். இருசக்கர வாகனம் பழுதானால் கூட அங்கேயே சரி செய்து கொடுத்திடுவாங்களாம்.
  • அண்ணாச்சி எங்களுக்கு செய்யும் சலுகைகளை எங்களது நண்பர்கள், உங்களது செலவை எல்லாம் உங்க ஹொட்டலே பார்த்துக்கொள்கின்றது. வாங்கும் சம்பளத்தை எல்லாம் வங்கியில் வட்டிக்கு போட்டு வைத்துவிடுவீர்கள் என்றும் கிண்டல் செய்வார்களாம்.

14553 total views