தற்கொலை செய்ய முடிவெடுத்த காதலர்கள்: திடீரென கொலையாக மாறிய அதிர்ச்சி சம்பவம்...

Report
314Shares

காதல் தோல்வியால் காதலன் மற்றும் காதலி தற்கொலை செய்ய முடிவு செய்த நிலையில் திடீரென காதலன் தனது காதலியை கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று சென்னையில் நடந்துள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த சுமர்சிங் என்பவர் காஜல் என்ற பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இந்த நிலையில் இந்த காதலை காஜலின் பெற்றோர் ஏற்கவில்லை. காஜலுக்கு வேறொரு மாப்பிள்ளையை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த காஜல், சுமர்சிங்கிடம் இருவரும் சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். தற்கொலையில் சுமர்சிங்கிற்கு விருப்பம் இல்லை என்றாலும் காதலியின் பேச்சை தட்டமுடியாமல் இருவரும் தற்கொலை செய்ய முடிவு செய்தனர்.

திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து இருவரும் சயனைடு சாப்பிட்டுள்ளனர். ஆனால் தற்கொலை முடிவில் இருந்து திடீரென மாற்றம் கொண்ட சுமர்சிங், வாயில் இருந்த சயனைடை துப்பிவிட்டு தற்கொலையில் இருந்து தப்பினார். அதே நேரத்தில் காஜலின் உயிரும் பிரியவில்லை. காஜல் உயிருடன் இருந்தால் மீண்டும் தன்னை தற்கொலை செய்ய வற்புறுத்துவார் என முடிவு செய்து அரைகுறை உயிருடன் இருந்த காஜலை துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

பின்னர் மயங்கி விழுந்த மாதிரி நடித்த சுந்தர்சிங்கை லாட்ஜ் ஊழியர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் பொலிஸ் விசாரணையில் முன்னுக்குபின் முரணுடன் பேசியதால் பொலிசார், காஜலை சுந்தர்சிங் தான் கொலை செய்தார் என்பதை கண்டுபிடித்து அவரை கைது செய்துள்ளனர்.

11622 total views