இன்றைய காலத்தில் பெண்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் இடத்தில் கூட பல விதமான முறைகளில் பல துன்பத்தையும், துயரத்தையும் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், இளம் பெண்ணை வாலிபன் ஒருவன் சரமாரியாக தாக்கும் காட்சியானது வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விடியோவானது வெளியான நிலையில்., ஹிந்தி மொழியில் பேசிக்கொள்வதும், பெண்ணை தாக்குவதை வீடியோ பதிவு செய்யும் பெண்ணை தாக்குபவனின் நண்பன் முதலில் பெண்ணை விட்டுவிடக்கூறி கூறி வருகிறான்.
பின்னர் அவனுக்கும் என்ன ஆனது என்ன தெரியவில்லை.. அவளை கதம் கரோ.. பஸ் கரோ (கொன்றுவிடு அல்லது முடித்துவிடு) என்று கூறுகிறான்.. இதனை கேட்கும் அந்த கொடூரன் பெண்ணை பலமாக தாக்கி உதைக்கும் நிலையில்., பெண் வலியால் கதறித்துடிக்கிறார்.
பெண்ணை தாக்கும் கொடூரன்.... pic.twitter.com/7lIjENdRMm
— Sriramrpckanna (@Sriramrpckanna1) June 24, 2019
பின்னர் இது குறித்த தகவல்கள் காவல் துறையினருக்கு தெரிவித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் பெண்ணை தாக்குவதை வீடியோ எடுக்கும் நண்பன் ஆட்கள் வந்துகொண்டு இருக்கிறார்கள்.. வா கிளம்பலாம் என்று கூறி கொடூரனை மற்றொரு கொடூரன் அழைத்து செல்கிறான். இது தொடர்பான வீடியோ காட்சிகளை உடனடியாக காவல் துறையினர் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இணையவாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.