மாணவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஸ்போர்ட்ஸ் டீச்சர்! இறுதியில் நேர்ந்த தரமான சம்பவம்!

Report
483Shares

பூனே அருகே உள்ள பிரபல பள்ளி ஒன்றில் 14 வயது மாணவனிடன் அதே பள்ளியை சேர்ந்த விளையாட்டு துறை ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று குறிப்பிட்ட ஆசிரியர் அந்த மாணவனை தனியாக தனது அறைக்கு வருமாறு அழைத்துள்ளார். ஆசிரியரின் அழைப்பை என்று அறைக்கு சென்ற மாணவனிடம் யாரும் இல்லாத நேரம் பார்த்து அந்த ஆசிரியர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்துவிடுவதாகவும் அந்த ஆசிரியர் மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் நடந்த சமப்வத்தை தனது பெற்றோரிடம் அந்த மாணவன் கூற, உடனே மாணவனின் பெற்றோர் குறிப்பிட்ட பள்ளி நிர்வாகத்தின் மீதும், ஆசிரியர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனனர். பெற்றோரின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சம்மந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர் ஒருவரே பள்ளி மாணவனிடம் தவறான முறையில் நடந்துகொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

14567 total views