கோவிலில் வைத்து பெண்ணுக்கு நேர்ந்த துயரம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சி..!

Report
1326Shares

கர்நாடக மாநிலம் ஹுப்ளி பகுதியில் கோவில் ஒன்றில் பெண் ஒருவர் மீது தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

குறித்த வீடியோவில், பெண் ஒருவர், கோவில் சிலைக்கு தோபம் ஏற்றிவிட்டு நகர்ந்து வரும் சமயத்தில், திடீரென அவரது சேலையில் தீப்பற்றி எரித்தது.

அங்கிருந்தவர்கள், அவர்களை காப்பாற்ற ஓடிவந்த சமயத்தில், அவர், பயத்தில் கோவில் வளாகத்தில் இருந்த அரை உள்ளே ஓடிச் சென்றுவிட்டார். இதனால், தீயானது அவரது உடலில் மளமளவென பரவிவிட்டது.

பின்னர், அங்கிருந்தவர்கள், பெரும் முயற்சிகள் மேற்கொண்டு தீயை அணைத்து குறித்த பெண்ணை மீட்டுள்ளனர்.

இந்த விபத்தில், பலத்த தீக்காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தயவு செய்து நினைவில் கொள்ளுங்கள், இதுப்போன்ற சமயத்தில், அவர் பயமின்றி உயிரை காக்க ஆடையை களைத்திருந்தாலோ, அல்லது, தரையில் படுத்து புரண்டிருந்தாலோ அவர் பலத்த காயம் அடைந்திருக்க மாட்டார் என்பது குறிப்பிடதக்கது.

45779 total views