அதுக்கு ஓகே சொன்னால் முவாயிரம் ரூபாய் சம்பளம் அதிகம்.. இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி 64 வயது நபர் செய்த காரியம்!

Report
583Shares

மும்பையில் வீட்டில் பணிபுரியும் பெண்ணிடம் 64 வயதான ஓய்வு பெற விமானநிலைய அதிகாரி ஒருவர் வரம்பு மீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட பெண் அந்த வீட்டில் புதிதாக வேளைக்கு சேர்ந்துள்ளார். அந்த பெண்ணிடம் 64 வயதான வீட்டின் உரிமையாளர் தனது மனைவி வீட்டில் இல்லை, தனது ஆசைக்கு நீ இணங்கினால் ஊதியத்தில் 3000 ரூபாய் அதிகமாக தருவதாகவும் கூறியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு அங்கிருந்து கிளம்பியுள்ளார். இந்நிலையில், அடுத்த நாள் அந்த பெண் மீண்டும் வீட்டு வேலைக்காக வர, அந்த 64 வயதான வீட்டின் உரிமையாளர் அந்த பெண்ணை கண்ட இடங்களில் தொட்டு அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

உடனே தனது கணவருக்கு போன் செய்த அந்த பெண் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உரிமையாளரை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

19249 total views