பேத்தி கண்முன்னே தாத்தாவிற்கு நிகழ்ந்த கொடூரம்.. பதற வைக்கும் சம்பவம்..!

Report
604Shares

பேத்தி கண்முன்னே தாத்தா மீது மினி லாரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் பெரியார் நகரை சேர்ந்தவர் முருகேசன். இவர் தனது பேத்தியுடன் சின்னக்கடை தெருவில் உள்ள மெடிக்கலுக்கு மருந்து வாங்க சென்றிருந்தார். மருந்து வாங்கி முடித்தவுடன், தனது இருசக்கர வாகனத்தில் ஏறி அமர்ந்த முருகேசன் பேத்தியை அழைக்க, குழந்தை எற முற்படும் போது, மினி லாரி ஒன்று இருசக்கர வாகனத்தில் வேகமாக மோதியது. இதில் முருகேசன் படுகாயம் அடைந்தார்.

கணநேரத்தில் நடந்த இந்த விபத்தில் சிறுமி உயிர் தப்பினார். இதையடுத்து படுகாயம் அடைந்த முருகேசனுக்கு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகிக் காண்போரை பதற வைக்கிறது. இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...