சிறுமியை சீரழித்த கொடூரன்.. வலியால் துடித்த சிறுமிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவமனை..!

Report
627Shares

இந்த உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அவ்வாறு நடைபெறும் அநீதிகள் சிறு குழந்தையாக இருக்கும் பெண்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை தொடர்ந்து, கொடூர எண்ணத்தை கொண்ட காம கொடூரர்களால் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருக்கும் பாவனா பகுதியை சார்ந்த குடியிருப்பில் சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் நேற்று வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டு இருந்தார்.

இந்த நேரத்தில், அதே பகுதியை சார்ந்த 45 வயதுடைய காம கொடூரன் சிறுமியிடம் ஆசை வார்த்தை காட்டி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இதனால் பாதிக்கப்பட்டு வலியால் கதறித்துடித்த சிறுமியை மீட்ட பெற்றோர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில், சிறுமி கதறித்துடித்ததை கண்ட மருத்துவர்கள் அலட்சியமாக மருத்துவமனை நேரம் முடிவடைந்துவிட்டது என்றும், சிகிச்சை இப்போது அளிக்க இயலாது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு கடும் ஆத்திரத்திற்கு உள்ளான சிறுமியின் உறவினர்கள் மருத்துவமனையை அடித்து நொறுக்கியதை அடுத்து, இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையயடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், உறவினர்களை சமாதானம் செய்து சிகிச்சை நடக்க ஏற்பாடு செய்தும், இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

20312 total views