பெண்களுக்கு மாதவிடாய் நாப்கின்களுக்கு பதில் இதை இலவசமாக வழங்கிய அரசு..!

Report
813Shares

சமீபத்தில் கேரளாவில் வந்த மழை, வெள்ளத்தின்போது பல பெண்கள் பாதிக்கப்பட்டனர். பலர் நிவாரணமுகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு மாதவிடாய் காலங்களில் சிரமமில்லாமல் இருக்க பேட்களுக்கு பதில் மென்ஸ்ட்ருயல் கப்பை கேரள அரசு வழங்கியது.

சுமார் 5 ஆயிரம் பெண்களுக்கு இதனை வழங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. பெண்கள் பலரும் மாதவிடாய் காலங்களில் பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். ஒரு மாதத்திற்கான நாப்கினைக்கு பெண்கள் செலவு 50 ரூபாய். அதே ஒரு வருடத்திற்கு 600 ரூபாய் இது பத்து வருடங்களுக்கு மொத்தம் 6000 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் தற்போது நாப்கினைக்கு பதிலாக மென்ஸ்ட்ருயல் கப் ஒன்று அறிமுகம் செய்துள்ளனர். இதன் விலை 2000 ரூபாய் என கூறப்படுகிறது.

நாப்கினை விட இதன் விலை அதிகமாக இருக்கலாம் ஆனால் ஆறு வருடங்களுக்கு 6000 ரூபாய் செலவு செய்கிறோம். ஆனால் இந்த கப்பை ஒருமுறை வாங்கினால் பத்து வருடங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கின்றனர்.

இதனை பெண்ணுறுப்பின் வழியாக கப்பை மேற்பரப்பில் கையை வைத்து சுருக்கி உட்புறமாக செலுத்த வேண்டும். பெண்ணுறுப்பின் உள்ளே வைத்தவுடன் தானாக விரிவடையும் ஒரு கப்பு போல கருப்பை குழாயில் வெளிப்புறத்தில் அதை சூழ்ந்து கொள்ளும் அந்த மென்ஸ்ட்ருயல் கப் உடனே உடலினுள் சென்று விடுமோ என்ற அச்சம் தேவையில்லை அது முழுக்க முழுக்க பாதுகாப்பானது.

இந்த கப்பை 2 மணி நேரத்திற்குப் பிறகு சுத்தம் செய்து கொள்ளலாம் மேலும் சுடுதண்ணீரில் சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். நாப்கின்களுக்கு மாற்றாகும் மென்ஸ்ட்ருயல் கப் நாப்கின்கள் பயனுள்ளதாக இருப்பதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.

27431 total views