கணவர் மீது இருந்த 30 வருட பகை... கொலை செய்துவிட்டு சாமி கும்பிட்டு சந்தோஷப்பட்ட மனைவி!

Report
381Shares

கணவன் மனைவி இடையே சண்டை இப்போது கொலையில் முடிகிறது. 30 ஆண்டுகாலம் கணவன் மீது பகையோடு வாழ்ந்து பிள்ளைகளை பெற்று வளர்த்த பின்னரும் அந்த பகை தீராமல் கொலை செய்து அதை சந்தோசமாக கொண்டாடியுள்ளார் ஒரு பெண்.

கொலை செய்து விட்டோமே என்ற கவலையோ குற்ற உணர்ச்சியோ கொஞ்சம் கூட இல்லாமல் கோவிலுக்கு வந்து சூடம் ஏற்றி சாமி கும்பிட்ட பெண்ணை அதிசயமாக பார்த்த மக்கள் பொலிசில் பிடித்துக்கொடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மனைவியால் கொல்லப்பட்ட நபரின் பெயர் ராமு என்பதாகும். 60 வயதாகும் ராமு அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழமாளிகை காலனி தெருவை சேர்ந்தவர். இவருக்கு அசலாம்பாள் என்ற மனைவியும் ராம்குமார்(30), அருள்(26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

கீழமாளிகையில் உள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. கரகாட்டம், ஒயிலாட்டம் என திருவிழா களைகட்டியது. கரகாட்டம் பார்த்து விட்டு வந்து அசந்து தூங்கியுள்ளார் ராமு. ஆனால் அசலாம்பாளுக்கு தூக்கம் வரவில்லை. எழுந்து நடந்து கொண்டிருந்தவர், வீட்டில் இருந்த கனமான கட்டையை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த கணவர் ராமுவின் தலையில் அடித்தில் ரத்த வெள்ளத்தில் சுருண்டார். தூக்கத்தில் இருந்து கண் விழிக்காமலேயே இறந்து போனார்.

கணவன் துடிதுடித்து இறந்ததைப் பார்த்த அசலாம்பாள், கொஞ்சம் கூட அழவில்லை, மெதுவாக கதவைப் பூட்டிக்கொண்டு வெளியேறினார். கோவிலில் நள்ளிரவு நேரத்திலும் கூட்டம் அதிகம் இருந்தது. அங்கிருந்த சாமி முன்பாக சூடம் ஏற்றி கும்பிட்டார். கையெடுத்து கும்பிட்டவாறே... சாமி என்னோட 30 வருட பகையை முடிச்சிட்டேன் என்று கூறி கண்ணீர் விட்டார்.

அசலாம்பாளின் நடவடிக்கை அங்கிருந்தவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அருகில் இருந்த அசலாம்பாள் வீட்டிற்குப் போய் பார்த்தனர். அங்கே ரத்த வெள்ளத்தில் இருந்த ராமுவைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். கொலை குறித்து போலீசில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு போலீசார் ராமுவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அசலாம்பாளை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி மகளிர் சிறையில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களாகவே மனநலம் பாதிக்கப்பட்டது போலவே நடந்து கொண்ட அசலாம்பாள் கடைசியில் கணவனையே கொன்று தனது பகையை முடித்துள்ளார். அப்படி என்னதான் பகை என்று கடைசி வரைக்கும் அவர் சொல்லவேயில்லை.

11977 total views