தங்கையை ஒருதலையாக காதலித்த திருமணமான அண்ணன்! இறுதியில் நிகழ்ந்த கொடூரம்

Report
743Shares

திருச்சியில் இரண்டு குழந்தைகளுக்கு தகப்பனாகிய காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை நபர் ஒருவர் வெட்டிக் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒருதலைக்காதலுக்கு பலியான பெண்ணின் பெயர் மலர்விழி மீரா என்பதாகும். திருச்சி தென்னூர் அண்ணாநகர் புதுமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் என்பவரின் மகளாவார். இவர் திருச்சியில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

சென்னையில் ஐடி கம்பெனி ஒன்றில் வேலை பார்த்தவர் பாலமுரளி கார்த்தி. இவர் திருமணமாகி இரண்டு குழந்தைகளுடன் சென்னையில் வசித்து வருகின்றார். திருச்சியில் குறித்த நபரின் தாய் வீடு உள்ளதால் அங்கு வந்து செல்லும் போது தங்கை முறையான மலர்விழியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

மலர்விழி நேற்று மாலை கல்லூரி முடிந்து வீட்டிற்கு நடந்து வந்துகொண்டிருக்கும் தருணத்தில், அருகிலிருந்த தண்ணீர்தொட்டியின் நின்று கொண்டிருந்த குறித்த வாலிபர் மலர்விழி மீராவிடம் மறித்து தகராறில் ஈடுபட்டார். பின்னர் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மலர்விழி மீராவை சரமாரியாக குத்தியுள்ளார்.

ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து கீழே சாய்ந்த மலர்விழியை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே மாணவி இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பொதுமக்களிடம் சிக்கிய பாலமுரளி கடுமையாக தாக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பொலிசாரின் விசாரணையில், திருமணத்திற்கு முன்பிருந்தே மலர்விழி மீராவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். சகோதரி முறையான தன்னை காதலிப்பது தவறு என்று அவர் கண்டித்துள்ளார். திருமணமான பின்னரும் முரளியின் தொந்தரவு அதிகரித்ததை மலர்விழி கண்டுகொள்ளாமலும், சட்டை செய்யாமலும் சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முரளி, எனக்கு கிடைக்காத நீ வேற யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று மீராவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

22576 total views