4 வயது சிறுமியின் உறுப்பில் சூடுவைத்த சைக்கோ மாமன்.. ஆசைக்கு இணங்காததால் நிகழ்ந்த கொடூரம்..!

Report
569Shares

மும்பையில் 4 வயது சிறுமியை பாலியல் ரீதியாக கொடூரமாக சித்ரவதை செய்த மாமனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மும்பை போரிவில்லை பகுதியைச் சேர்ந்த தம்பதி வேலைக்கு சென்று வரும் நிலையில் அவரது மகள் கணவன் வகைப் பாட்டி வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், வீட்டில் எவரும் இல்லத சமயத்தில் சிறுமியின் அத்தையுடைய கணவர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, வேலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியின் தாய், அந்தச் சிறுமி சோர்வாக இருந்தது குறித்த்து விசாரித்தார்.

அப்போது அந்தச் சிறுமி தனது பிறப்புறுப்பைக் காட்டிய போது தீக்காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பாலியல் பலாத்கார முயற்சி நடைபெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர். இது குறித்து விசாரித்த போது சிறுமி தனது அத்தை கணவனை சுட்டிக் காட்டியுள்ளார்.

இதையடுத்து சிறுமியின் தாயின் புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்தனர். இந்நிலையில் புகாரை வாபஸ்பெறுமாறு அந்தப் பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் மிரட்டல் விடுத்துள்ளனர். பாலியல் முயற்சியின் போது சிறுமி தடுத்த காரணத்தினால் அந்த இடத்தில் நெருப்பை வைத்து சூடு வைத்துள்ளார் அந்த கொடூரன்.

15593 total views