சேவலால் பெண் அனுபவித்து வந்த கொடுமை... பின்பு நடந்தது என்ன?

Report
2481Shares

மகாராஷ்டிர மாநிலத்தில் புணே நகரில் தனது வீட்டுக்கு அருகே சேவல் ஒன்று வந்து நின்று கூவுவதால் தனது தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என புகார் தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் புணே நகரில் சோம்வார்பேட்டை பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளார். அதில் தினமும் அவரது வீட்டுக்கு பக்கத்தில் உள்ள சேவல் ஒன்று அதிகாலையில் கூவுகிறதாம்.

இதனால் தூக்கத்திற்கு இடையூறு ஏற்படுகிறது என புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து போலீஸார் புகாரை பெற்று கொண்டனர்.

இது குறித்து பொலிஸார் கூறுகையில் பெண் கொடுத்த புகாரை பெற்றுக் கொண்டோம். இதுகுறித்து விசாரித்த போது அந்த பெண் அவரது சகோதரி வீட்டில் தங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன் அங்கு அந்த பெண் இது போன்ற ஒரு புகாரை கொடுத்து விட்டு சென்றுவிட்டார் என கூறினர்.

இதுகுறித்து புகார் கொடுத்த அந்த பெண்ணின் சகோதரியை பொலிஸார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அப்போது அவர் கூறுகையில் புகார் கொடுத்த பெண் சற்று மனநிலை சரியில்லாதவர் என தெரிவித்துள்ளார். இதையடுத்து பொலிஸார் இந்த விவகாரத்தில் வழக்கு ஏதும் பதியவில்லை.

loading...