மணமகனுக்கு வித்தியசமான பரிசை கொடுத்து அதிர்ச்சியளித்த பெண் வீட்டார்கள்... என்ன பரிசு தெரியுமா?..

Report
293Shares

மேற்கு வங்க மாநிலத்தில் மணமகனுக்கு பெண் வீட்டார் 1000 புத்தங்களை பரிசாக அளித்துள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது..

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சூர்யங்கட்டா பாரீக் என்கிற பள்ளி ஆசிரியருக்கும், பிரியங்கா என்ற பெண்ணிற்கும் பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

பள்ளி ஆசிரியராக இருக்கும் சூரியங்கட்டா பெண் வீட்டாரிடம், தனக்கு வரதட்சணை வாங்குவதில் உடன்பாடு இல்லை என்பதால், உங்கள் பெண்ணை மட்டும் தந்தால் போதும் என கண்டிப்புடன் சொல்லி திருமணம் செய்து கொண்டார்.

1000 புத்தகம் பரிசு

இந்நிலையில் நல்ல தங்கம் போல் மனம் கொண்ட மாப்பிள்ளைக்கு வித்தியாசமான பரிசு கொடுத்து அசத்த நினைத்த மணமகள் வீட்டார், ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய வித்தியாசமான பரிசை கொடுத்துள்ளனர். இந்தப் புத்தகங்களின் மதிப்பு ஒரு லட்சம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மணப்பெண்ணுக்கு புத்தகம் படிப்பது என்றால் மிகவும் பிடிக்கும் என்பதாலும், அறிவு மட்டுமே அழிக்க முடியாத சொத்து என்பதாலும் புத்தகத்தை தேர்வு செய்து பரிசளிப்பதாக கூறியுள்ளனர். இந்த வித்தியாசமான பரிசுகள் மணமகனுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது..

8990 total views