இஸ்லாம் தம்பதியை மரத்தில் கட்டிவைத்து அடித்த இளைஞர்கள்.. பரபரப்பை ஏற்படுத்தும் வீடியோ..!

Report
1990Shares

மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முஸ்லீம் மதத்தை சேர்ந்தவர்களை மரத்தில் கட்டிப் போட்டுச் செருப்பினால் அடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மத்திய பிரதேசத்தின் சியோனி பகுதியில் ஆட்டோவில் இரண்டு முஸ்லீம் மதத்தை சேர்ந்த இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த, பசு காவலர்கள் என்று சொல்லி கொள்ளும் அரக்கர்கள் சிலர், ஆட்டோவை வழிமறித்து அவர்களைத் தாக்கியுள்ளனர்.

மேலும் இரண்டு ஆண்களையும் மரத்தில் கட்டி வைத்து இரும்பு கம்பியால் அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்த பெண்ணின் கணவரை கொண்டே அந்த பெண்ணை அடிக்க வைத்துள்ளனர்.

மேலும் செருப்பால் அடித்து ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி வற்புறுத்தி மிருகதனமாக நடந்து கொண்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதலின் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முஸ்லீம் அமைப்புகள் உட்படப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர். மேலும் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ள சிலரை தேடி வருகின்றனர்.

loading...