சூரத் கோச்சிங் சென்டரில் தீவிபத்து.. உயிருக்கு பயந்து மாடியிலிருந்து குதிக்கும் மாணவர்கள்.. நெஞ்சை உலுக்கும் வீடியோ
பயிற்சி மையத்தில் பிடித்த திடீர் தீயால் மாணவ மாணவிகள் 20 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா பகுதியில் உள்ள காம்ப்ளக்ஸ் நான்கு மாடி கட்டிடம் கொண்டது. இதில் 4வது மாடியில் பள்ளி விடுமுறையில் இருக்கும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவ மாணவிகள் பயிற்சி வகுப்புகளுக்கு வந்தனர்.
இந்நிலையில் நேற்று மதியம் 4 வது மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீயானது மூன்றாவது மாடிக்கும் பரவியதால் மாணவ மாணவிகள் செய்வதறியாது திகைத்தனர். அங்கிருந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே உயிர் பிழைப்பதற்காக மாணவர்கள் சிலர் மாடிகளிலிருந்து கீழே குதித்தனர்.
இதில் உடல் சிதறியும், தீ விபத்தில் உடல் கருகியும் 20 மாணவ மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Surat @sardanarohit pic.twitter.com/db5Kzn4bGO
— Mayursinh (@apkajaddu) May 24, 2019
இங்கு மீட்புப்பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ள அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி, விபத்தில் பலியானவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.