17 ஆண்களை காதல் வளையில் சிக்கவைத்து ஏமாற்றிய பெண்.. சிக்கித்தவிக்கும் ஆண்கள்.. குழப்பத்தில் பொலிசார்..!

Report
786Shares

சேலத்தில் சினிமாவை விஞ்சும் வகையில், ஒரே நேரத்தில் பல ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி லட்சக்கணக்கில் பணம் பறித்த பெண் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

கவுதம் மேனன் இயக்கத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம், 'பச்சைக்கிளி முத்துச்சரம்'. நாயகி ஜோதிகா, கையில் காசு புரளும் ஆண்களுக்கு வலை விரித்து, காதல் நாடகமாடி, தன் குடும்ப கஷ்டத்தைச் சொல்லி பணம் பறிக்கும் மோசடி பெண் பாத்திரத்தில் அசத்தி இருப்பார். கலையரசன் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்' படத்தில் வரும் நாயகியோ, பார்வையற்ற வசதியான இளைஞர்களை குறிவைத்து காதல் நாடகம் நடத்தி, பணம் பறிப்பாள்.

இப்படி கற்பனை கதாபாத்திரங்களை விஞ்சும் வகையில் நிஜத்திலும் சேலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், ஒரே நேரத்தில் பல ஆண்களை தன் காதல் + காம வலையில் விழவைத்து நூதன முறையில் ஏமாற்றியிருக்கும் பரபரப்பு தகவல்கள் அம்பலமாகி உள்ளன.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35). பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் எடுத்து வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கல்யாணத்திற்கு பெண் தேவை என்று, கடந்த 2016ம் ஆண்டு தமிழ் மேட்ரிமோனி இணையதளத்தில் தன் புகைப்படம், வேலை, ஊதியம் உள்ளிட்ட விவரங்களை பதிவேற்றம் செய்திருந்தார்.

அதைப்பார்த்த சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள மருளையாம்பாளையத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகள் மேகலா, இவருடைய செல்போன் நம்பருக்கு மேட்ரிமோனியல் புரஃபைல் பிடித்து இருப்பதாக எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளார். அன்றுமுதல் இவர்கள் அடிக்கடி தங்களுக்குள் புகைப்படம், குடும்ப விவரங்களை பகிர்ந்து கொள்வது என நட்பை தொடர்ந்துள்ளனர். ஒருகட்டத்தில், மேகலாவை உயிருக்கு உயிராக காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து விட்டதாகவும் பாலமுருகன் கூறும் அளவுக்கு வாட்ஸ்அப் மூலம் பழகி வந்துள்ளனர். இத்தனைக்கும் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில், மேகலா தன்னை ஏமாற்றிவிட்டதாக பாலமுருகன் புகார் கொடுத்துள்ளார்.

ஒது ஒருபுறமிருக்க, பாலமுருகனிடம் தன் கைவரிசையை காட்ட ஆரம்பித்த மேகலா அடுத்தடுத்து என, தொடர்ந்து 17 ஆண்களிடம் காதல் வயப்படது போல் பேசி, காம வலையில் சிக்க வைத்து அவர்களிடமிருந்து பணம், நகை என கொள்ளையடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இது குறித்து மேகலா கூறியதாவது,

பாலமுருகன், தான் தன்னை ஏமாற்றியுள்ளார். அவர் என்னைப்பற்றிய அவதூறு செய்திகளை பரப்பி வருகிறார். என்னிடம் 35 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பதாக உங்களிடம் பாலமுருகன் சொல்கிறார். சிலரிடம் ஒரு கோடி ரூபாய் வரை கொடுத்ததாகச் சொல்லி இருக்கிறார். இஇது பரவாயில்லை. அவர் பல பேரிடம் என்னை ஒரு 'கால் கேர்ள்' என்றுகூட சொல்லி இருக்கிறார். பல பேருக்கு வாட்ஸ்அப் மூலம் என் புகைப்படங்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

இதையெல்லாம், பார்த்தால் எனக்கு ஷாக் ஆக இருக்கிறது, எதை நம்புவது? இதையெல்லாம் கேட்டால் எனக்கு சிரிப்புத்தான் வருகிறது. எது எதுக்கோ ஆதாரம் வைத்திருப்பதாகக் கூறும் பாலமுருகன், அவர் பணம் கொடுத்ததற்கு ஏதாவது ஆதாரம் இருந்தால் காட்டட்டும் என்று அசால்ட்டாக பதில் கூறியுள்ளார் மேகலா.

28255 total views