அன்று மடிந்த நம் தமிழர்களை இன்று எப்படி உங்களால் மறக்க முடிந்தது?... கண்ணீர் சிந்த வைத்த உயிர்தியாகம் மறவாதீர்கள்..!

Report
410Shares

ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நமது தமிழ் உறவுகளை பெரும்பாலானோர் மறந்து விட்டனர் என்றே கூறலாம்.

சம்பவம் நடந்த தருணத்தில் பரபரப்பாக இருக்கும் நமது மனித உள்ளங்கள் அதே சம்பவம் சற்று நாள் கடந்து விட்டால் அதனை மறந்துவிடுகின்றனர். இது மிகவும் வேதனைக்குரிய விடயமே..

அவ்வாறு தான் கடந்த மே மாதம் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேர் கொல்லப்பட்டது இன்று தான் என்பதை அநேகர் மறந்துவிட்டனர்.

மே 22 கடந்த ஆண்டு, இதே தினம் தான் தூத்துக்குடி மக்கள் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். ஏனெனில் இந்த ஸ்டெர்லைட் ஆலையால் புற்றுநோய், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், இதனால் பலரின் உயிர் போயிருப்பதாகவும் மக்கள் போர்க் கொடி உயர்த்தினர்.

தமிழகத்தையே திரும்பி பார்க்க வைத்த போராட்டமாக இது மாறியதால், பொலிசார் திடீரென்று நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அப்போது இது பெரிய விஷயமாக பேசப்பட்டது. ஆனால் அது நடந்து இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. மறந்துட்டீங்களே....

16643 total views