குழந்தை பாடம் படிக்காததால் நிகழ்ந்த கொலை இல்லை... வெளியான தாயின் முகம்சுழிக்க வைக்கும் பின்னணி ரகசியம்!

Report
1102Shares

பாடம் படிக்காமல் டிவி பார்த்து கொண்டிருந்த 5 வயது குழந்தையை தாய் அடித்ததால் நேற்று மரணம் அடைந்த குழந்தை குறித்த செய்திகள் நேற்றைய தினத்தல் பரபரப்பாக வெளிவந்தது.

இந்த விவகாரத்தில் குழந்தையை தாய், தனது கள்ளக்காதலனுடன் அடித்தே கொலை செய்த அதிர்ச்சி தகவல் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பிரசன்னா-நித்யகமலா தம்பதிக்கு பிறந்த குழந்தை தான் நேற்று மரணமடைந்த குழந்தை. நித்யகமலாவுக்கு அவருடைய உறவினர் முத்துப்பாண்டியன் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது.

இந்த கள்ளக்காதலை அறிந்த பிரச்சன்னா நித்யகமலாவை குழந்தையுடன் விட்டுவிட்டு சென்றுவிட்டார். இதனையடுத்து நித்யகமலா, கள்ளக்காதலனுடன் நிரந்தரமாக தொடர்பில் இருக்க தொடங்கிவிட்டார்.

ஆனால் உறவினர்களின் தகாத பேச்சினால் கள்ளக்காதலனுடன் திருச்சி அருகே தொட்டியம் பகுதிக்குச் என்று அங்கு தாங்கள் கணவன், மனைவி என்று கூறி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளனர்.

இந்த நிலையில் நித்யகமலாவுடன் அவருடைய குழந்தை எப்போதும் ஒட்டிக்கொண்டே இருந்ததால் தனது உறவுக்கு இடைஞ்சலாக இருப்பதை அறிந்த முத்துப்பாண்டியன், ஒரு கட்டத்தில் ஆத்திரமாகி குழந்தையை அடித்துள்ளார்.

நித்யகமலாவும் சேர்ந்து அடிக்க, குழந்தை படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியது. இதனையடுத்து குழந்தை படிக்காமல் டிவி பார்த்தால் அடித்ததாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களையும் பொலிசாரையும் நித்யகமலா நம்ப வைத்துள்ளார்.

ஆனால் இந்த சம்பவத்திற்கு பின்பு முத்துப்பாண்டி தலைமறைவானதால் சந்தேகம் அடைந்த பொலிசார் நித்யகமலாவை தங்கள் பாணியில் விசாரித்ததில் முத்துப்பாண்டி தனது கணவர் இல்லை என்றும், கள்ளக்காதலர் என்றும், இருவரும் சேர்ந்துதான் குழந்தையை அடித்து கொலை செய்ததாகவும் கூறினார்.

இதனையடுத்து முத்துபாண்டியையும் நித்யகமலாவையும் கைது செய்த பொலிசார் அவர்கள் இருவர் மீது கொலை வழக்கை பதிவு செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

loading...