மகளை காதலித்து திருமணம் செய்யப்போகும் தடகள வீராங்கனை..! அதிர்ச்சியில் பெற்றோர்

Report
2108Shares

ஒடிசாவைச் சேர்ந்தவர் டுட்டி சந்த்(23). தடகள வீராங்கனையான இவருக்கு ஆண்மை தன்மை இருப்பதாகக் கூறி சில ஆண்டுகளுக்கு முன்பு தடகள போட்டிகளில் பங்கேற்கத் தடைவிதிக்கப்பட்டது. ஆனால் இந்த தடையானது 2015ம் ஆண்டு தகர்க்கப்பட்டது.

இந்நிலையில், இவர் கடந்த ஆண்டு நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்று இந்தியாவிற்கு பெருமை தேடி கொடுத்தவர்.

இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியிருந்தார். மேலும் விருப்பத்துக்கு எனது பெற்றோரே எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் என்னுடைய சகோதரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். என் துணையைத் தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டுட்டீ தாயார் அக்கோஜி ஆங்கில பத்திரிகை ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், எனது மகள் விரும்புவது யாரைத் தெரியுமா? என் பேத்தியை அவள் விரும்புகிறாள். எனக்குப் பேத்தி என்றால் அவளுக்கு மகள். அப்படி இருக்கும் போது, ஒரு மகளைத் தாய் திருமணம் செய்து கொள்வதை இந்த சமூகம் ஏற்றுக்கொள்ளுமா? இதனால் உன் விருப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி விட்டேன்.

ஆனால் அதற்கு அவளோ சட்டம் இருக்கிறது என்கிறாள். இரண்டு பெண்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பதை இந்த சமூகமும், சட்டமும் வேண்டுமானால் ஏற்றுக்கொள்ளட்டும். ஆனால் நாங்கள் கிராமத்தில் வாழ்பவர்கள். இதை எங்களால் எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது' என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.

loading...