மாமா வீட்டிற்கு விடுமுறைக்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் 6 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்!

Report
842Shares

ஆறு வயது மாமன் மகளுடன் ஒடிப்பிடித்து விளையாடாமல் விபரீதமாக விளையாடிய அத்தை மகன்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருச்சியில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

கோடை விடுமுறையில் சொந்தக்காரர்கள் வீட்டிற்கு போவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் திருச்சி ஜீயபுரம் அருகே தாயனூர் கீழக்காட்டில் உள்ள மாமா வீட்டிற்கு இரண்டு சிறுவர்கள் விடுமுறைக்கு சென்றுள்ளனர். மாமனுக்கு ஆறு வயதில் ஒரு மகள் இருக்கிறாள். அவளுடன் விளையாடிக்கொண்டு பொழுதை போக்கியுள்ளனர்.

அத்தையும், மாமாவும் வேலைக்காக வெளியில் சென்ற நேரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கட்டத்தில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். விளையாட்டு போக்கில் சிறுமி அதனை தெரிவிக்கவில்லை.

குளிக்க வைக்கும் போது சிறுமியின் ஆடைகளில் ரத்தக்கறை இருந்துள்ளது. உறுப்பில் ரத்தப்போகும் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி அம்மா, என்ன நடந்தது என்று விசாரித்தார்.

அப்போது அந்த சிறுமி அழுது கொண்டே அத்தை மகன்கள் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தை கூறினார். சிறுமியை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர் ஜீயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குபதிவு செய்து இரண்டு சிறுவர்கள் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மைனர் சிறுவர்கள் என்பதால் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அக்கம் பக்கத்து வீட்டினர்களால் பாலியல் தொல்லை ஏற்படுவது ஒருபுறம் இருக்க சொந்தக்காரர்களால் சிறுமிகள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. யாரையும் நம்பி வீட்டிற்குள் விடவே பயமாக இருக்கிறது என்பது பெண் குழந்தையை பெற்றவர்களின் வேதனையாக இருக்கிறது.

26475 total views