கணவரிடம் கிடைக்காத அன்பு.... வேறு நபரிடம் கிடைத்ததால் தடம்மாறிய பெண்! இறுதியில் நிகழ்ந்த கொடூரம்
இந்தியாவில் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரைச் சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவர் கள்ளக்காதலனால் முகத்தில் ஆசிட் ஊற்றப்பட்டுள்ள கொடுமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவனிடம் கிடைக்காத அதிக பாசம் புதிய நபரிடம் கிடைக்க அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. பின்பு தனிமையில் சந்தித்து பழகி வந்த இவர்களின் விவகாரம் குறித்த பெண்ணின் கணவருக்கு தெரிந்துள்ளது.
இதுகுறித்து கணவர் கண்டித்ததால் அப்பெண் கள்ளக்காதலிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த நபர், அப்பெண் முகத்தில் ஆசிட் வீசியுள்ளான். அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தற்போது சிகிச்சை பெற்று வரும் அப்பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.