விடுமுறைக்கு அத்தை வீட்டிற்கு வந்த சிறுமி.... பரிதாபமாக உயிரிழந்த சோகம்! பெற்றோர்களே உஷார்

Report
655Shares

வீட்டில் தனியாக இருந்த 10 வயது சிறுமி சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடிய போது, எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை அயனாவரம் ரயில்வே குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டிற்கு பெங்களூருவிலிருந்து 10 வயதான சிறுமி கோடை விடுமுறைக்காக அத்தை வீட்டிற்கு வந்துள்ளார். அத்தையின் மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மருத்துவமனையிலேயே தன் மகனுடன் தங்கியுள்ளார். அத்தை வீட்டில் இருந்த மற்றவர்களும் அக்கம் பக்கத்தில் சிறு வேலையில் இருந்துள்ளனர்.

அப்போது வீட்டில் தனியாக இருந்த சிறுமி, சேலையால் கட்டப்பட்ட தொட்டிலில் விளையாடி உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கழுத்து இறுக்கப்பட்டு தொங்கியபடி இருந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் சித்தப்பா ஈஸ்வரன் என்பவர் வீட்டின் கதவை தட்டிய போது உள்பக்கமாக தாழ்பாள் போட்டு இருந்ததாக தெரிகிறது. அதன் பின், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது சிறுமி சேலையில் கட்டப்பட்ட தொட்டியில் தொங்கியவாறு இருந்துள்ளார்.

உடனடியாக கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்து சிறுமியை மீட்டு பெரம்பூர் ரயில்வே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

loading...