இந்த சிறுத்தை உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Report
383Shares

இமாச்சல பிரதேச மாநிலத்தில், பனி மலை ஒன்றில் காட்டுயிர் புகைப்படக் கலைஞர் சவுரப் தேசாய் எடுத்த நிழற்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி மலையில் இந்தப் படத்தை எடுத்துள்ளார் சவுரப் தேசாய். பின்னர் அந்தப் படத்தை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார்.

தேசாய் படத்தைப் பதிவிட்ட சில மணி நேரங்களில் அந்த போஸ்ட், 14,000 லைக்ஸ்களை அள்ளியிருக்கிறது. பல நெட்டிசன்கள் படத்தில் இருக்கும் சிறுத்தையை கண்டுபிடிப்பதற்கு சிரம்பபட்டுள்ளதையும் கமென்ட்ஸ்களில் பதிவிட்டுள்ளனர்.

ஒரு இன்ஸ்டா பயனர், “நான் இந்தப் படத்தை சில மணி நேரங்களாக பார்த்து வருகிறேன். இதில் என்ன இருக்கிறது என்பதே தெரியவில்லை” என்று கமென்ட் செய்துள்ளார். “அந்த கண்களைப் பார்த்தவுடன் மெய்சிலிர்த்து விட்டேன்” என்று இன்னொருவர் பதிவிட்டுள்ளார்.

படத்தில் இருப்பது பனிப் பிரதேசத்தில் வாழும் சிறுத்தை என்று சொல்லப்படுகிறது. இந்த வகை சிறுத்தைகள் இமாச்சல் பிரதேசத்தில் 9,800 அடி முதல் 17,000 அடி உயரத்தில் வாழும்.

loading...