மாமனார் தொடர்ந்து கொடுத்த பாலியல் தொல்லை.. மருமகள் எடுத்த விபரீத முடிவு..!

Report
656Shares

மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் மருமகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருத்தணி வெங்டபுரம் என்கிற பகுதியில் வசிப்பவர் முனிகிருஷ்ணன். இவர் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கரும்பேடு எனும் கிராமத்தை சேர்ந்த யுவராணிக்கும், அவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

முனிகிருஷ்ணன் லாரி ஓட்டுனர் என்பதால் வெளியூருக்கு சென்று விட்டு சில நாட்கள் கழித்தே திரும்புவார் எனத் தெரிகிறது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திகொண்ட முனிகிருஷ்ணனின் தந்தை டில்லிபாபு, யுவராணிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

யுவராணி அவரை கண்டித்தும் அவர் திருந்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, இதுபற்றி தனது கணவரிடம் யுவராணி புகார் கூறினார். ஆனாலும், தன் தந்தையை பற்றி தவறாக யுவராணி கூறுவதாக நினைத்த முனிகிருஷ்ணன் அவரின் புகாரை நம்பவில்லை.

இதை இன்னும் சாதகமாக எடுத்துக்கொண்ட டில்லி பாபு யுவராணியிடம் அதிக உரிமையுடன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால், விரக்தி அடைந்த யுவராணி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும், தனது தற்கொலைக்கு மாமனாரே காரணம் எனவும் கடிதம் எழுதி வைத்துள்ளார். தான் எவ்வளவு கூறியும் புரிந்து கொள்ளாத கணவர், என் சாவிற்கு பிறகாவது தனது தந்தை பற்றி புரிந்து கொள்ளட்டும் என உருக்கமாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, டில்லிபாபுவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.