காவல் ஆய்வாளரை கடித்துக் குதறிய சாரதி... நடந்ததை நீங்களே பாருங்க!

Report
536Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் ராமநாதபுரத்தில் போக்குவரத்துக் காவல் ஆய்வாளருடன் வேன் ஓட்டுநர், கட்டிப்புரண்டு சண்டையிட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜய்காந்த் ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக உச்சிப்புளி பகுதியிலிருந்து வந்த குட்டியானை வேன் ஒன்று விறகுக் கட்டைகளை அதிக அளவில் ஏற்றி வந்துள்ளது. இதையடுத்து அந்த வேனை ஆய்வாளர் விஜய்காந்த் நிறுத்த கூறியுள்ளார்.

குட்டியானை வேனின் ஓட்டுநர் சிறிது தூரம் சென்று பின்னர், தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த போக்குவரத்து ஆய்வாளர் விஜய்காந்த் வேன் ஓட்டுநரை வேனிலிருந்து இறங்கச் சொல்லி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த சண்டை கடைசியில் பெரிதாக மாறி ஆய்வாளரின் கழுத்தை வேன் சாரதி கடித்துக் குதறும் அளவிற்கு சென்றுள்ளது. இதனையடுத்து ஓட்டுனரை கைது செய்த பொலிசார், கழுத்தில் கடிவாங்கிய ஆய்வாளரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு 6 தையலல்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...
18315 total views