ஆடைகளை அவிழ்த்து கொடுமைப்படுத்திய குடும்பம்.. நிர்வாணமாக காவல் நிலையம் ஓடி வந்த பெண்.. வீடியோ எடுத்த கொடூரர்கள்..!

Report
1272Shares

மருமகளின் ஆடைகளை அவிழ்த்து கொடுமை செய்த குடும்பத்தினரை கைது செய்யக் கோரி நிர்வாணமாகவே காவல்நிலையம் வந்த இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் உள்ள சூரு மாவட்டத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவன் ஊரில் இல்லாத நேரத்தில் புகுந்த வீட்டினர் அடித்து உதைத்து நிர்வாணப்படுத்தியதாக புகாரில் தெரிவித்துள்ளார். அந்த பெண் நிர்வாணமாக வீதியில் இறங்கி நடந்து வந்ததை செல்போனில் படம் பிடித்த சிலர் அதனை வைரலாக்கி வருகின்றனர்.

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. வரதட்சணை கொடுமை ஒருபக்கம் இருக்க புகுந்த வீட்டினர் கொடுமை அதிகரித்துக்கொண்டுதான் இருக்கிறது.

செல்போனில் படம்பிடித்த கொடூரர்கள்

ராஜஸ்தான் மாநிலம், சூரு மாவட்டத்தில் உள்ள பிடாசார் பகுதியை சேர்ந்த ஒரு பெண் திடீரென வீதியில் நிர்வாணமாக நடந்து வந்தார். அதைப்பார்த்த பலரும் அந்த பெண்ணின் உடலை மூட எந்த உதவியும் செய்யவில்லை மாறாக செல்போனில் படம் பிடித்தனர். அழுது கொண்டே வந்த பெண் நேராக சென்றது போலீஸ் ஸ்டேசனுக்குத்தான்.

கணவனின் குடும்பமே தாக்கியது

கடந்த ஞாயிறு கிழமையன்று மாமியார், கொழுந்தியாள் மற்றும் கொழுந்தனார்கள் அனைவரும் சேர்ந்து, அந்த பெண்ணை சராமரியாக அடித்து, உதைத்துள்ளனர். அதோடு அந்த பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணப்படுத்தியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிவந்த பெண் நேராக காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். கணவன் அஸ்ஸாம் மாநிலத்தில் கூலி தொழிலாளியாக வேலை செய்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தன்னை திருமணம் செய்து அழைத்து வந்து சித்ரவதை செய்கிறார்கள் எனவும் அந்த புகாரில் கூறியுள்ளார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மாமியார், கொழுந்தனார் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

39988 total views