30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை புரோக்கரின் ஆடியோ பேச்சு!

Report
1015Shares

இந்தியாவில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகளை விற்றுவந்த ஒய்வு பெற்ற செவிலியர் தான் 30 வருடங்களாக இந்த தொழில் செய்து வருவதாக பேசும் அதிர்ச்சி ஆடியோ வைரலாகி வருகிறது.

குழந்தைகள் இல்லாத தம்பதிகள் தத்தெடுப்பதற்கு நமது நாட்டில் உள்ள சட்டத்தில் பல கட்டுப்பாடுகள் உள்ளன. இதனாலேயே பலரால் சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதில் பல தடைகளைச் சந்திக்கின்றனர். இதுவே குழந்தைக் கடத்தல்காரர்களுக்கு வசதியாகப் போய் விட்டது.

இந்நிலையில் ஏழை குடும்பத்தில் பிறந்த குழந்தைகளை வாங்குபவர்களுக்கு பிறந்த குழந்தை போல் பிறப்பு சான்றிதழுடன் ஒய்வு பெற்ற செவிலியர் அமுதா என்பவர் ராசிபுரத்தில் விற்று வந்தது தெரியவந்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை விற்ற செவிலியர் அமுதாவுடன், தர்மபுரியைச் சேர்ந்த ஒருவர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் இடம் பெற்றுள்ள தகவல்களும் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த ஆடியோ இதோ...

35158 total views