மதுரையில் திரைப்படங்களை மிஞ்சிய சைக்கோவின் கொடூர செயல்..! பதற வைக்கும் வீடியோ

Report
2434Shares

தமிழகம் மதுரை அருகே சாலையில் கற்களை வைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் போன பிறகு பணம்,நகை,செல்போனை கொள்ளையடிக்கும் சைக்கோ தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை திருநகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் கடந்த 23 ஆம் திகதி இரவு பணி முடித்துவிட்டு தேசிய நெடுஞ்சாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அந்த சமயத்தில், சாலையில் இருந்த கல் மீது பைக் மோதியதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த பாஸ்கரன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சியை பொலிசார் ஆய்வு செய்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

அதாவது குறித்த சிசிடிவி காட்சியில், சாலையில் ஒருவர்

பெரிய கல்லை வைத்ததும், கல்லை எடுக்க வந்த லாரி ஓட்டுநரை மிரட்டி விரட்டியதும் பதிவாகியிருந்தது.

அதுமட்டுமல்லாது, அந்த கல்லில் மோதி இருசக்கர வாகனங்கள் கீழே விழுந்தவுடன், உடனடியாக ஓடிப் போய் அவர்களிடம் நகை, பணம், என அனைத்தையும் கொள்ளையடிக்கும் வீடியோ காட்சியும் பதிவாகியிருந்தது.

இந்நிலையில், வாகன விபத்தை ஏற்படுத்தி நூதன முறையில் கொள்ளையடிக்கும் சைக்கோ திருடன் தனக்கன்குளத்தைச் சேர்ந்த ராஜா என்பது தெரியவந்துள்ளது.

ராஜா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

88170 total views