வீடியோ கோலில் விளையாட்டாக செய்த காரியம்... பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!

Report
1417Shares

ஆந்திரா மாநிலம் திருப்பதியைச் சேர்ந்த மெக்கானிக் ஒருவர், குடிபோதையில் விளையாட்டாகத் தூக்குப் போட முயன்று நாடகமாடி, உண்மையிலேயே உயிர் இழந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

நண்பருடன் வீடியோ கோலில் மூலம் தூக்குப் போட்டுக் கொள்வதாக நாடகமாடிய மெக்கானிக், நேரடியாக வீடியோ கோலிலேயே உயிரிழந்துள்ள சம்பவம் நடந்தேறியுள்ளது.

வீட்டில் ஆள் இல்லாத நேரத்தில் குடிபோதையில் தூக்குப் போடுவது போல் மின்விசிறியில் சேலையைத் கட்டி தனது கழுத்துடன் கட்டிக்கொண்ட மெக்கானிக், தனது நண்பரை வீடியோ கோலில் அழைத்து விளையாட்டாக மிரட்டத் திட்டமிட்டுத் நடித்துள்ளார்.

தூக்கில் தொங்குவது போல் நாடகமாடத் துவங்கிய மெக்கானிக் போதையில் தடுமாறி, உண்மையிலேயே மின்விசிறியில் தூக்கில் தொங்கிவிட்டார். அருகில் யாரும் இல்லாததனால் உதவிக்கு யாரையும் அவரால் அழைக்க முடியவில்லை.

கழுத்தில் கட்டி இருந்த சேலை இறுக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார். வீடியோ கோலில் இருந்த நண்பர் கொடுத்த புகாரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று மெக்கானிக் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகத் திருப்பதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

38490 total views