சாமியாரின் பேச்சைக் கேட்டு 16 வயது சிறுவனை ஜுவசமாதி செய்த குடும்பத்தினர்.. தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

Report
872Shares

தமிழகத்தில் 16 வயது சிறுவன் ஒருவனை சாமியாரின் பேச்சைக் கேட்டு குடும்பத்தினரே உயிருடன் ஜீவ சமாதி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை அடுத்த செண்பகத்தோப்பு ராமநாதபுரம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஆசிரியர் ஹரிகிருஷ்ணன். இவருக்கு தன நாராயணன் என்ற 16 வயது மகன் இருந்தான். இவனுக்கு உடல் நிலை சரியில்லை. இதனால் படிப்பை தொடர முடியாமல் வீட்டிலேயே இருந்து வந்தான்.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விட்டிற்கு அருகில் இருந்த கிணற்றின் பக்கத்தில் தன நாராயணன் நின்று கொண்டிருந்த போது வலிப்பு வந்து கிணற்றின் உள்ளே விழுந்து விட்டான்.

உடனடியாக தீயனைப்பு படையினருக்கு தகவல் அனுப்பிய நிலையில் தீயனைப்பு படையினர் வந்து தன நாராயணனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்ப ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளனர்.

அப்போது, அதில் இருந்தவர்கள் தன நாராயணனைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவன் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

அந்த சமயத்தில், அந்தப் பக்கமாக ஒரு சாமியார் வந்துள்ளார். அவர் அந்தப் பகுதியில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது. அவர் வந்து என்ன ஏது என்று பார்த்து விட்டு தன நாராயணன் இறக்கவில்லை. நாடி இருக்கு. அவன் ஜீவசமாதி அடைய வேண்டும் என்று கூறி விட்டுப் சென்றுள்ளார்.

இதைக் கேட்ட குடும்பத்தினர் கொஞ்சமும் யோசிக்காமல் ஜீவசமாதிக்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

பெரிய பள்ளம் தோண்டி அதில் சிறுவனை அமர வைத்த நிலையில் வைத்து மண்ணைப் போட்டு மூடி விட்டனர். அந்த சிறுவனுக்கு உண்மையிலேயே நாடி இருந்திருந்தால் அவனை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு போய் சிகிச்சை அளித்திருந்தால் ஒருவேளை காப்பாற்றியிருக்கலாமோ என்னவோ.

சாமியார் பேச்சைக் கேட்டுக் கொண்டு சிறுவனை ஜீவசமாதி செய்த பெற்றோரின் செயலை என்னவென்று சொல்வது.

25054 total views