கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்துகொண்ட பெண்..கடிதத்தை படித்து துடிதுடித்து போன பெற்றோர்..!

Report
1458Shares

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியை சார்ந்தவர் மரியஜோசப் (வயது 70). இவருடைய மகளின் பெயர் பிரியதர்சினி (வயது 25). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

சென்னையில் பணியாற்றி வந்த பிரியதர்சினி, கடந்த சில நாட்களுக்கு முன்னதாக பணிக்கு விடுப்பு வழங்கி மற்றொரு நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 18 ம் தேதியன்று நடைபெற்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக வீட்டிற்கு வந்துள்ளார்.

இந்த நேரத்தில், கடந்த 19 ம் தேதியன்று வீட்டில் உள்ள தனது அறையில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இவரை மயக்க நிலையில் இருந்து மீட்டெடுத்த பெற்றோர்கள், உடனடியக அங்குள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததை அடுத்து, இவரின் உடலை கண்டு பெற்றோர்கள் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.

அந்த விசாரணையில், பிரியதர்சினியின் அறையில் செய்த சோதனையில் அவர் கைப்பட எழுதி வைத்திருந்த கடிதத்தை கண்டெடுத்துள்ளனர். அந்த கடிதத்தில், சென்னையில் பிரியதர்சினி பணியாற்றிய நிறுவனத்தில் அவரது பதவியில் இருந்து திடீரென நிர்வாகம் இரக்கம் அளித்ததை அடுத்து கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்தேன்.

இதன் காரணமாக மற்றொரு நிறுவனத்திற்கு சென்று பணி செய்ய முடிவு செய்து, பணியை விட்டு விலகினேன். மற்றொரு நிறுவனத்திற்கு பணிக்கு சென்று வந்தாலும் எனக்கு இருந்த மன உளைச்சலின் காரணமாக தற்கொலை முடிவு செய்தேன் என்று எழுதியுள்ளார். இது குறித்த தொடர் விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

loading...