காதலிக்கு 15 இடங்களில் சரமாரி கத்திகுத்து!... காதலனின் வெறிச்செயல்

Report
174Shares

சென்னையில் காதலியை காதலனே 15 இடங்களில் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவரது காதனை போலீசார் தீவிரமாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் கவின் (24). சென்னையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர், கல்லூரியில் படித்தபோது, உடன் படித்த ஆம்பூரை சேர்ந்த காவியா (22) என்பவருடன் காதல் ஏற்பட்டது. இருவரும் அவ்வப்போது சந்தித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மாலை இவர்கள் இருவம் திருவான்மியூர் மாளவிகா மூன்றாவது அவென்யூவில் சாலையோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, இருவருக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கவின் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவியாவின் வயிறு உள்ளிட்ட 15 இடங்களில் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்த காவியா மயங்கி கீழே விழுந்தார். இதனையடுத்து கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து படுகாயமடைந்த காவியாவை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவரிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் காவியா கடந்த ஒரு மாதமாக கவினிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். நேற்று இரவு காவியாவை பார்க்க வந்தபோது, அவர் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்த கவின் கவியாவை கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்தேன் என்று கூறியுள்ளார். இந்த வழக்கில் தொடர் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிசார், காவ்யாவின் சிகிச்சைக்கு பிறகே உண்மை வெளிவரும் என்று கூறியுள்ளனர்.

6295 total views