கணவரை தோளில் சுமந்து நடந்த பெண்! கிராமத்தினர் கொடுத்த வினோத தண்டனை...

Report
315Shares

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் வேறு ஜாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டதால் இளம் பெண்ணுக்கு கொடூர தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

போபாலில் உள்ள ஜபுவா மாவட்டத்தில் தேவிகார் பகுதியில் 20 வயதை சேர்ந்த இளம் பெண் ஒருவர் வேறு சாதி ஆணை காதலித்தார். இதையடுத்து அவரை திருமணமும் செய்து கொண்டனர்.

இதுகுறித்து அந்த பெண்ணின் ஜாதியினருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு வித்தியாசமான தண்டனைகளை வழங்கினர்.

திருமணம் செய்து கொண்ட கணவரை தோளில் சுமந்தபடி நீண்ட தூரத்துக்கு நடந்து செல்லுமாறு கூறினார். இதற்கு தயங்கிய அப்பெண்ணை அந்த சமூகத்தினர் மிரட்டினர்.

வேறு வழியின்றி அந்த பெண், தன் கணவரை தோளில் தூக்கிக் கொண்டு நடக்கத் தொடங்கினார். அப்போது அந்த பெண்ணின் பின்னால் ஏராளமான ஆண்கள் வந்தனர்.

நடையின் வேகத்தை சிறிது குறைத்தாலும் அந்த நபர்கள் அந்த பெண்ணை மிரட்டினர். மேலும் மூச்சு இரைப்பின் காரணமாக அவர் சிறிது தூரம் நின்ற போதும் அவர்கள் மிரட்டி மேற்கொண்டு நிற்காமல் நடந்து செல்லுமாறு கூறினர்.

இதனால் அந்த பெண் மிகவும் சிரமத்துடன் நடந்து சென்றார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது இதையடுத்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்துள்ளனர்.

10713 total views