3 மணிநேரம் திருநாவுக்கரசு பண்ணைவீட்டில் நடந்த அதிரடி... படு புத்திசாலித்தனமாக செயல்பட்ட சிபிசிஐடி!

Report
1931Shares

பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி பொலிசார் "தேர்வுகள் அவசரம்" என எழுதப்பட்ட, 'பதிவு எண்' இல்லாத காரில் சோதனைக்கு சென்று சுமார் மூன்று மணிநேரம் சோதனை செய்துள்ளனர்.

பொள்ளாச்சியில் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து ஒரு கும்பல் மிரட்டிய சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அடுத்தடுத்து வெளியான வீடியோக்கள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 200-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி பெண்களை இக்கும்பல் மிரட்டி வந்ததாக தகவல் வெளியானது. தமிழகத்தையே நடும்ங்க விட்ட இந்த பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பொள்ளாச்சி அருகே சின்னப்பபாளையம் கிராமத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசர் வீடு உள்ளது. இந்த வீட்டில் சிபிசிஐடி தொடர்ந்து இன்று 3வது நாளாக தொடர்ந்து சோதனையிட்டு வருகின்றனர். சிபிசிஐடி பொலிசார் சோதனைக்கு சென்ற அவர்கள் தேர்வு அவசரம் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வாகனத்தில் ரகசியமாக சென்று திருநாவுக்கரசு வீட்டில் சுமார் 3 மணிநேரம் ஆய்வு நடத்தியுள்ளனர்.

அங்கு வந்த நிபுணர் குழுவினர் வரைபடங்களை நிபுணர் குழுவை வைத்து வரைந்து எடுத்துச் சென்றதாகவும், ஏற்கனவே கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட வீடியோ ஆதாரங்களை வைத்து சம்பவ இடத்தை ஒப்பிட்டுப் பார்த்து அதற்கான வரைபடங்களையும் வரைந்து எடுத்துச் சென்றதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த வீடியோவில் இருக்கும் வீடும், சம்பவம் நடந்த இடம் எது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

loading...